தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு: என்னென்ன கூடுதல் தளர்வுகள்?

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு: என்னென்ன கூடுதல் தளர்வுகள்?

தமிழகத்தில் வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும், பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நிர்வாகப் பணிகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இன்றி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 27 மாவட்டங்களில் தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், கடைகளை நுழைவுவாயிலில் வாடிக்கையாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com