தொகுதிக்கு ரூ.13 கோடி செலவு செய்ததா பாஜக? எஸ்வி சேகரின் ஆடியோ வைரல்!

தொகுதிக்கு ரூ.13 கோடி செலவு செய்ததா பாஜக? எஸ்வி சேகரின் ஆடியோ வைரல்!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 260 கோடி ரூபாய் வரை கருப்பு பணத்தை செலவிட்டு இருக்கலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளில்வந்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்ற பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர் குறித்த தகவல் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தோல்வி குறித்து சமூக வலைத்தளத்தில் பேசிய பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்து இருக்காங்க என்று நான் கேள்விப்பட்டேன் என்றும், தேர்தலில் தோற்றவர்களும், வெற்றி பெற்றவர்களும் கணக்கு கொடுத்துள்ளார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக பிரமுகர் ஒருவரே பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி தரப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டு இருப்பதால் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 260 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளதாக தெரிகிறது.

தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்களின் வீடு வீடாக சென்று சோதனையிட்ட வருமானவரித் துறை தற்போது பாஜகவினரின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னரும் பாஜக தலைவர்கள், வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் பாஜக வேட்பாளர்கள் 13 கோடி தரப்பட்டுள்ளது என வெளிப்படையாக பேசிய எஸ்வி சேகர் மீதாவது வருமானவரித்துறை விசாரிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com