'எதே... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியா..?'- திமுகவை பங்கமாக கலாய்த்த அதிமுக

'எதே... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியா..?'- திமுகவை பங்கமாக கலாய்த்த அதிமுக

திமுகவுக்கு மிகவும் நெருக்கமான 'சன் நியூஸ்' தொலைக்காட்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையில் இன்று 130 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில், 'சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட #COVID19 சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தேன்.

நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த திறப்பு நிகழ்ச்சி குறித்து செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று போடுவதற்கு மாறாக, சன் நியூஸ் நிறுவனம், 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி' என்று குறிப்பிட்டு செய்தி ஒளிபரப்பியுள்ளது. இது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

இது சம்பந்தமான வீடியோவை அதிமுக, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com