கடுமையான முழு ஊரடங்கா..?- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

கடுமையான முழு ஊரடங்கா..?- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
திமுகவின் தலைவராகிறாரா மு.க.ஸ்டாலின்?

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதியோடு, கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கின் மூலம் கொரோனா தொற்று, மாநில அளவில் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், குறிப்பிடத்தகும் அளவுக்கு குறையவில்லை. இதனால் மீண்டும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது கொரோனா தொற்றுடன் கறுப்பூப் பூஞ்சை மற்றும் வெள்ளைப் பூஞ்சை தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கு நீட்டிப்பு குறித்துப் பேசுகையில், 'முழு ஊரடங்கின் பொது மக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை அறிவித்தோம். ஆனால், இந்த தளர்வுகளை மக்கள் சிலர் வெளியே சுற்ற பயன்படுத்தி வருகிறார்கள். மக்களில் சிலர் தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறி வருகிறார்கள். முழு ஊரடங்கை சிலர் விடுமுறைக் காலம் என்று சுற்றி வருகிறார்கள். மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு கொடுக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையில் அவர்கள், தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழுமையான ஊரடங்கை அமல் செய்தால் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறி இருக்கிறார்கள். எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கை எடுக்க அரசு நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com