நாளையிலிருந்து சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

நாளையிலிருந்து சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

தமிழக தலைநகர் சென்னையில் நாளை முதல் ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த திங்கட் கிழமை முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த உத்தரவைப் பலர் மதிக்காமல் வெளியே சுற்றி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதை சரிகட்டும் நோக்கில் இன்று சென்னை மாநகராட்சியின் ஆணையர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 'நாளை முதல் சென்னையில் ஊரடங்கு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் குழுக்களை இரட்டிப்பாக அதிகரிக்க உள்ளோம். ஊரடங்கை மீறி தனியார் வாகனங்களில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தங்களது ஏரியா விட்டு வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் மக்கள் வரக் கூடாது. ஊரடங்கு உத்தரவை முழுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com