காய்கறியை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

காய்கறியை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு வந்துள்ள நிலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வியாபாரத்தின் அதிக விலைக்கு காய்கறிகள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 'காய்கறிகள் விலைகள், அரசு நிர்ணயித்து உள்ளது. எப்படி உழவர் சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதோ, அதைப் போலத் தான் நடமாடும் காய்கறி வண்டிகளிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த விலைப்படி தான், வியாபாரிகள் விற்பனை என்பதை செய்ய வேண்டும்.

அதையும் மீறி யாராவது அதிக விலைக்கு காய்கறிகளை விற்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள், இது குறித்து அரசிடம் முன் வந்து புகார் அளிக்க வேண்டும்' என்றுள்ளார்.

உள்ளூர் அரசு நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தினமும் காலை 7 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும். சென்னையில் 1,610 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதர மாவட்டங்களில் 2,770 வாகனங்களில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், '044-22253884' என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com