ஊரடங்கின் போது அதிக விலைக்கு பால் விற்றால் கடை உரிமம் காலி..!

ஊரடங்கின் போது அதிக விலைக்கு பால் விற்றால் கடை உரிமம் காலி..!

இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு வந்துள்ள நிலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அதிக விலைக்கு பால் விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களது கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக பால் வளத் துறை அமைச்சர் நாசர் இது பற்றி கூறுகையில், 'தமிழகத்தில் எங்கு பால் விநியோகம் தடை பட்டாலும், பால் விநியோகத்தில் எதாவது சிக்கல் எழுந்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது. பால் என்பது மக்களுக்கான அடிப்படை தேவையாக இருக்கிறது.

பிறந்த குழந்தையிலிருந்து வயதானவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் கூட பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்பவர்களாக உள்ளார்கள். எனவே அது மக்களுக்கு எந்த வித தங்கு தடையுமின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு சமயத்தை முன் வைத்து யாராவது பால் விலையை அதிகமாக்கி விற்பனை செய்தால், அவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com