டிடிவி தினகரன், பிரேமலதா உள்ளிட்ட 13 தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு

டிடிவி தினகரன், பிரேமலதா உள்ளிட்ட 13 தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு

2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட வேண்டுமென போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன.

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்தார்கள் என்பது மட்டுமின்றி அவர்களே முன்னின்று போராட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசியல் தலைவர்களான நல்லகண்ணு, வைகோ, கோபாலகிருஷ்ணன், டிடிவி தினகரன், பிரேமலதா, எல்.கே.சுதீஷ், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜா உள்ளிட்டோர் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் மீதும் அன்றைய தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகளின் விசாரணை தற்போதும் நிலுவையில் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மொத்தம் 13 தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com