தாராளமாக நிதி வழங்குங்கள்: வெளிநாட்டு தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

தாராளமாக நிதி வழங்குங்கள்: வெளிநாட்டு தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசுக்கு தாராளமாக நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும் என சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்

இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி, திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி, ஜோஹோ நிறுவனம் ரூ.5 கோடி என கோடி கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதி உதவி குவிந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தை தாண்டி வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் ’மாபெரும் கொரோனா தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவம் மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தமிழகத்திற்கு நிதி உதவி செய்யுங்கள், நிதி உதவி செய்பவர்கள் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும்’ இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com