கொரோனா தடுப்பூசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை- தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு.

இது குறித்து அரசு கூறியிருப்பதாவது:-

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.

தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுன்ற் இடைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட உள்ள திட்டம் முடுக்கிவிடப்பட்டு உள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகள் எளிமையாக அதைப் பெறும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அரசு.

தமிழக அரசு, 5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com