பயணிகளே இல்லை: 7 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தென்னிந்திய ரயில்வே!

பயணிகளே இல்லை: 7 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தென்னிந்திய ரயில்வே!

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் காரணத்தினால் பொதுபோக்குவரத்து சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கும் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு மட்டும் வாகனங்களில் செல்லலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் 13 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் 7 சிறப்பு ரயில்களில் விவரங்கள் பின்வருமாறு:

1. சென்னை எழும்பூர் - மன்னார்குடி

2. கண்ணூர் - கோவை

3. கோவை - கண்ணூர்

4. ஆலப்புழா - கண்ணூர்

5. கண்ணூர் - ஆலப்புழா

6. திருச்சி - எழும்பூர்

7. எழும்பூர் - திருச்சி

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com