விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகிறாரா நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மே 7-ம் தேதி பதவியேற்றது.
விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகிறாரா நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

தமிழக அரசு சார்பாக விரைவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மே 7-ம் தேதி பதவியேற்றது.

தொடர்ந்து கொரோனா பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மே 28-ம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக விரைவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுப்பினராவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதற்காக விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதுவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தைச் சார்ந்த ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாண்டிய ராஜன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

தொடர்ந்து தமிழக அரசு 2021 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது.

பழனிவேல் தியாகாரஜன் லெமேன் பிரதர்ஸ், ஸ்டாடர்ட் சார்டெட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் அமெரிக்காவில் பணியாற்றியவர் என்பது கூடுதல் தகவல்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com