நெஞ்சு வலியால் சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி: பாலியல் புகார் என்ன ஆகும்?

நெஞ்சு வலியால் சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி: பாலியல் புகார் என்ன ஆகும்?

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் என்ற பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளதை அடுத்து, இது குறித்து குழந்தைகள் நல ஆணையம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா, பள்ளி நிறுவனர், தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று அவர்கள் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும். ஆனால் சிவசங்கர் பாபாவுக்கு பதிலாக ஜானகி என்பவர் ஆஜரானார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சு வலி என்றும் அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக தெரிகிறது. இதனையடுத்து இன்று ஆஜரானவர்களிடம் மட்டும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

சிவசங்கர் பாபாவுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலியா? அல்லது விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக நெஞ்சுவலி என்ற போர்வையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? என்று கேள்விகள் மக்கள் மனதில் எழுதியுள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com