ஒருவழியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர்: யார் தெரியுமா?

ஒருவழியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர்: யார் தெரியுமா?

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற போதிலும் காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் தலைவர் பதவிக்கான நபர் தேர்வு செய்யப்படாமல் இருந்தது.

காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் தலைவர் தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு சில முறை கூடியும் உடன்பாடு ஏற்படாததால் தலைவர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் சட்டப் பேரவையில் கட்சியின் தலைவராக செல்வபெருந்தகை அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், துணை தலைவராக ராஜேஷ்குமார் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுவின் தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதில் எம்.எல்.ஏக்களிடையே உடன்பாடு இல்லாத நிலையில் தற்போது ஒரு வழியாக தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com