எழுவர் விடுதலை: அண்ணாவை மேற்கோளிக்கு திமுகவை விமர்சித்த சீமான்

எழுவர் விடுதலை: அண்ணாவை மேற்கோளிக்கு திமுகவை விமர்சித்த சீமான்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளர், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக பேரறிவாளனுக்கும், ராஜிவ் காந்தி கொலைக்கும் சம்பந்தமில்லை என்ற கூறப்படுவதாலும், எழுவர் விடுதலை என்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது.

பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள், கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு அரசுகளையும், அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து, தன் மகனின் விடுதலைக்காக மன்றாடி வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அவர், 'அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட, 161வது பிரிவின்படி தீர்மானம் நிறைவேற்றி, எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com