கமல் கட்சியில் இருந்து விழுந்த இன்னொரு விக்கெட்: பொதுச்செயலாளரே விலகினார்

கமல் கட்சியில் இருந்து விழுந்த இன்னொரு விக்கெட்: பொதுச்செயலாளரே விலகினார்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் கட்சியில் இருந்து விலகினார். இதனை அடுத்து மேலும் சிலர் விலக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன் என்று சந்தோஷ் பாபு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கமலஹாசன் அவர்களுக்கு தன் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தங்களுடைய நட்பு என்றும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்னவே துணை தலைவர் மகேந்திரன் நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபுவும் விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com