சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதியா: அரசு ஆலோசனை!

சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதியா: அரசு ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் ஆகியவைகள் அனைத்து பகுதிகளிலும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்த ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஒருசில குறிப்பிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டீக்கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் பெரிய மால்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருந்தாலும் கூடுதலாக ஒரு சில கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மீதி மாவட்டங்களில் கூடுதலாக சில கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளதால் சலூன்கள், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளை வகுத்து, திறக்க அனுமதிக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com