ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன்.. 2-வது தவணை வழங்குவது எப்போது?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகையை 5000 ரூபாயாக அளிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை அந்த அரசு கண்டுகொள்ளவில்லை.
ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன்.. 2-வது தவணை வழங்குவது எப்போது?

இன்று முதல் ரேஷன் கடைகளில், கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

கொரோனா முதல் அலையின் போது அப்போதையைத் தமிழக அரசு 1000 ரூபாய் நிவாரண நிதியாக ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு அறிவித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகையை 5000 ரூபாயாக அளிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை அந்த அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் மே 7-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின், முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதன்படி முதல் தவணையாக மே மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணை ஜுன் 14-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

சென்ற வாரம் 14 வகை இலவச மளிகை பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டு, அதவும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

14 வகை இலவச மளிகை பொருட்கள்

14 வகை மளிகை பொருட்கள் பட்டியல்

1) கோதுமை மாவு - 1 கிலோ

2) உப்பு - 1 கிலோ

3) ரவை - 1 கிலோ

4) சர்க்கரை - 500 கிராம்

5) உளுத்தம் பருப்பு - 500 கிராம்

6) புளி - 250 கிராம்

7) கடலை பருப்பு - 250 கிராம்

8) கடுகு - 100 கிராம்

9) சீரகம் - 100 கிராம்

10) மஞ்சள் தூள் - 100 கிராம்

11) மிளகாய் தூள் - 100 கிராம்

12) குளியல் சோப் - 1 (125 கிராம்)

13) பாத்திரம் கழுவும் சோப் - 1 (250 கிராம்)

14) டீ தூள்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com