கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மருத்துவத் துறையினர், காவல் துறையினர், பத்திரிகை துறையினர், சுகாதார ஊழியர்கள் உள்பட பல்வேறு துறையினர் உயிரிழந்து வரும் நிலையில் அந்தந்த துறையினர்கள் உயிரிழந்தால் நிதி உதவி செய்யும் அறிவிப்பு அவ்வபோது தமிழக அரசால் வெளியிடப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினருக்கு தலா 25 லட்சம் நிதியுதவி குறித்த அறிவிப்பு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளருக்கான ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகை ஏற்கனவே 3000 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் முக ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com