தமிழகம் முழுவதும் இனி தனியார் மருத்துவமனைகளிலும் 'ரெம்டெசிவர்' மருந்து!

தமிழகம் முழுவதும் இனி தனியார் மருத்துவமனைகளிலும் 'ரெம்டெசிவர்' மருந்து!

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களுக்கு, ரெம்டெசிவர் மருந்து மிகவும் அவசியம் என சொல்லப்படுகிறது. பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தங்களிடம் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவர்' மருந்து அவசியம் என்று சொல்கிறார்கள்.

நோயாளிகளிடம் போதுமான பணம் இருந்தாலும், இந்த மருந்தை வாங்குவது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் இந்த மருந்தை அரசே விற்பனை செய்து வந்தது. கூட்டம் அதிகரித்ததால் இந்த மருந்து விற்பனை தற்போது நேரு அரங்கத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் அரசே, ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் இனி ரெம்டெசிவர் மருந்து கிடைக்கப் பெற அரசு வழி வகை செய்துள்ளது. இதன் மூலம் தற்போது நிலவி வரும் பற்றாக்குறை ஓரளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெம்டெசிவர் மருந்தைப் பொறுத்த வரையில், மத்திய அரசின் தயவை நம்பியே தமிழக அரசு இருக்கிறது. இதனால் தங்களுக்கு கொடுக்கும் ரெம்டெசிவர் அளவை அதிகரிக்கச் சொல்லி தமிழக அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com