ரெம்டெசிவர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்

ரெம்டெசிவர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து இதுவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இனி நேரு ஸ்டேடியத்தில் மாற்றப்பட உள்ளதாக தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மருந்து விற்பனை நிலையத்தை மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ரெம்டெசிவர் மருந்து விற்பனை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் தெரிவித்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூட்டம் அதிகரிப்பதால் மருந்து விற்பனை செய்யும் இடம் மாற்றப்பட்டதாகவும் நேரு ஸ்டேடியத்தில் கூடுதல் கவுன்டர்கள் அமைக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இனி ரெம்டெசிவர் மருந்து வாங்குபவர்கள் எந்தவித இடைஞ்சலும் இடையூறுமின்றி வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com