மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு: அதிமுக முன்னாள் அமைச்சர்

மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு: அதிமுக முன்னாள் அமைச்சர்

தமிழ்நாடு அரசு, கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருவதாக அதிமுக அரசில் அமைச்சராக இருந்தவரும், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாளின் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்திருந்தது. தற்போது அது 17 ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது. இப்படி திறம்பட கட்டுப்பாடுகள் விதித்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அரசு குறைத்திருக்கிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரை கொரோனா விவகாரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து நாம் முழுவதும் விடுபட ஒரே வழியாக மருத்துவ வல்லுநர்கள் சொல்லி வருவது தடுப்பூசி மட்டும் தான். எனவே கூடிய விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக கொண்டு போய் சேர்த்தால் மட்டும் தான் இந்த பெருந்தொற்றில் இருந்து நம்மால் விடுபட முடியும்.

எனவே தடுப்பூசி போடும் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com