ஆக்சிஜன் படுக்கை காலியில்லை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழப்பு

ஆக்சிஜன் படுக்கை காலியில்லை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் படுக்கை இல்லாத காரணத்தினால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை பல மருத்துவமனைகளில் உள்ளது என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர் படுக்கை காலி இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் நூற்றுக்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது

இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே ஆம்புலன்சில் காத்திருந்த 6 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் படுகைகள் காலி இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸ்லேயே மூன்று கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனையடுத்து உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com