Rain Alert - தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை தொடரும்!

Rain Alert - தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை தொடரும்!

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:-

வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சிலங இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com