தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை: அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்!

தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை: அதிமுக எம்.எல்.ஏ புகழாரம்!

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள திமுக அரசு, கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாரட்டிப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சரும் இன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார்.

மதுரையில், தன் தொகுதி உட்பட்ட இடங்களில் கொரோனா வார்டுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் உதயகுமார். தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி எழுந்த போது, 'கொரோனா தொற்றுப் பரவலின் போது போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதற்கு நல்ல பலன் இருப்பதாகவே தெரிகிறது. மதுரையைப் பொறுத்தவரை கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.

மக்களும், தமிழ்நாடு அரசு போட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதித்து நடந்துள்ளார்கள். இந்த காரணங்களினால் தான் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே இதற்கு நாம் பாராட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com