7 ரூபாய் மட்டுமே நன்கொடை வாங்கும் இளைஞர்கள்: அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் தெரியுமா?

7 ரூபாய் மட்டுமே நன்கொடை வாங்கும் இளைஞர்கள்: அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் தெரியுமா?

புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்களின் அமைப்பு ஒன்று வெறும் ஏழு ரூபாய் மட்டுமே நன்கொடை பெற்று வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏழு ரூபாய் நன்கொடை கொடுங்கள் அதன் மூலம் ஒருவரின் பசியை போக்கலாம் என்று முகநூலில் அந்த இளைஞர்கள் விளம்பரம் செய்துள்ளார்கள். பிரபாகரன் புரட்சி விதைகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த இளைஞர் குழுவினர் ஏற்கனவே கஜா புயலின் போதும் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் ஆதரவற்றோர் மற்றும் சாலையில் தங்கியிருப்போர் பலர் பசியோடு இருப்பதை பார்த்ததும் அவர்களின் பசியைப் போக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் தங்களுடைய முகநூல் பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர். வெறும் ஏழு ரூபாய் மட்டும் நீங்கள் எங்களுக்கு நன்கொடை கொடுங்கள், அந்த பணத்தை வைத்து நாங்கள் ஒருவருடைய பசியை போக்கிவிடுவோம் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

ஆயிரக்கணக்கில் நன்கொடை கேட்டால் தான் பலரும் யோசிப்பார்கள். ஆனால் ஏழு ரூபாய் நன்கொடை என்பதால் பலரும் யோசிக்காமல் உடனடியாக அனுப்பி வைப்பதாகவும் அந்த பணத்தை வைத்து தாங்கள் தக்காளி சாதம் முட்டை உள்ளிட்ட உணவு தயாரித்து நாங்களே விநியோகம் செய்கிறோம் என்றும் அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தினமும் காலையில் சமையல் தொடங்கி மதியத்திற்குள் சமையலை முடித்து பார்சல் செய்து 12 இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கோயில்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுக்கிறோம் என்றும் இந்த உணவு அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் ஏழு ரூபாய்க்கு மேல் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை என்றும் அந்த பணத்தை வைத்துதான் நாங்கள் இந்த பசியை போக்கும் பணியை செய்து வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com