வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை பாஜக பிரமுகர் எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பின்னர் ஜக்கி குறித்து எதுவும் பேசுவதில்லை என்று நீண்ட அறிக்கை விடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஹெச் ராஜா, ஜக்கி வாசுதேவ் பற்றி பேசுவதற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் தியாகராஜனின் பூர்வீகத்தை பற்றி பேசுவோம் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டதற்கு ’நாங்கள் புதிதாக பதவியேற்றுள்ள ஐந்து ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட போகிறோம். அந்த அடிப்படையில் ஒரு கருத்து சொல்ல போகிறேன். தயவு செய்து இது நல்ல எண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள், யாரிடம் இந்த கருத்தை எந்த நேரத்தில் வெளியிடுவது என்பதற்கான அடிப்படையான ஒரு லிமிட் வேண்டும். தயவு செய்து மனிதன் பேசுகிற, தகுதி உள்ள மனிதன் பேசுகிற விமர்சனங்கள் கேள்விகள் கோரிக்கைக்கு பதில் சொல்கிறேன். வெறி பிடித்த நாய்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை. நான் ஒரு நாட்டின் அமைச்சர், நான் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும்? தயவு செய்து நாய் குலைப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல கட்டாயப்படுத்த வேண்டாம்’ என்று கூறினார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com