ராஜகோபாலன் வாக்குமூலத்தில் திடுக் தகவல்: மேலும் சில ஆசிரியர்களும் பாலியல் தொல்லை கொடுத்தார்களா?

ராஜகோபாலன் வாக்குமூலத்தில் திடுக் தகவல்: மேலும் சில ஆசிரியர்களும் பாலியல் தொல்லை கொடுத்தார்களா?

பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைன் பாடங்கள் எடுக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர்களுடன் வாட்ஸ் அப்பில் சேட் செய்யும்போது பாலியல் தொடர்பான தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து இருப்பதாக கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. மேலும் ராஜகோபாலன் மட்டுமின்றி மேலும் சில ஆசிரியர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. எனவே மேலும் சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என்றும் சென்னை காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com