ஆம்புலன்ஸில் நோயாளிகள் இறப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் சேகர் பாபு

ஆம்புலன்ஸில் நோயாளிகள் இறப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் சேகர் பாபு

கொரோனா வைரஸ் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இடமில்லாத காரணத்தால் மணிக்கணக்கில் மருத்துவமனை வெளியில் ஆம்புலன்சில் பல நோயாளிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ’தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதே ஆம்புலன்ஸில் நோயாளிகள் உயிரிழப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் இன்று கொரோனா தொற்று சிகிச்சை வசதிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் இந்த கருத்தை தெரிவித்தார். ஆம்புலன்சில் கொரனோ நோயாளிகள் உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது 160 படுக்கைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதுமட்டுமின்றி மேலும் 120 படுக்கைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com