போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ராஜகோபாலன் மீது அதிரடி நடவடிக்கை!

போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ராஜகோபாலன் மீது அதிரடி நடவடிக்கை!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபால் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அவரைக் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தற்போது அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்சோ சட்டம் என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாயும் சட்டமாகும். இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போக்சோ சட்டத்தில் ஒரு வழக்கு செய்யப்பட்டால் அந்த வழக்கை 3 மாதங்களுக்குள் காவல்துறை முடிக்க வேண்டும் என்பதும் குழந்தைகளின் எதிர்கால நலனை கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆசிரியர் ராஜகோபால் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதை அடுத்து அவர் மீதான வழக்கை 3 மாதத்தில் முடியவும் வாய்ப்பு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com