'அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே அனுமதி'- போலீஸ் எச்சரிக்கை

'அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே அனுமதி'- போலீஸ் எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை எதிர்கொள்ள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த திங்கட் கிழமை முதல் மாநிலம் தழுவிய அளவில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

முதல் சில நாட்களில் ஊரடங்கு விதிமுறைகளை பலர் சரியாக பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல் துறை தரப்பும் அரசு தரப்பும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை காவல் துறை தரப்பு, 'அத்தியாவசிய மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களை நாங்கள் அனுமதிப்போம். ஆனால், தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வருகிறோம்.

99 சதவீத மக்கள் முகக் கவசம் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை முறையாக அணியாமல் பலர் சுற்றி வருகிறார்கள். மக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். தங்கள் மூலம் மற்றவர்களுக்குத் தொற்றுப் பரவக் கூடாது என்பதை அவர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com