சென்னையில் ரூ.97ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு!

சென்னையில் ரூ.97ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு!

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் இருந்து அதிக லாபம் சம்பாதிப்பதற்காக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருவதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சியின் கண்டனங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 25 காசுகள் உயர்ந்து 97.19 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. சென்னையில் தற்போது 97 ரூபாயை தாண்டியுள்ள பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 91.42 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தான் மிக அதிக பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com