ஆசிரியர் ராஜகோபாலனை சிறையில் அடைக்க உத்தரவு: காவலில் எடுத்து விசாரிக்கப்படுவாரா?

ஆசிரியர் ராஜகோபாலனை சிறையில் அடைக்க உத்தரவு: காவலில் எடுத்து விசாரிக்கப்படுவாரா?

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலனை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக 11அம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சற்று முன் அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து ஜூன் 8 வரை அவரை நீதிமன்ற காவலில் அடைக்க வேண்டும் என்பதால் சற்று முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com