PSBB பள்ளி விவகாரம்: மேலும் 3 ஆசிரியர்களை விசாரிக்க போலீஸார் முடிவு!

PSBB பள்ளி விவகாரம்: மேலும் 3 ஆசிரியர்களை விசாரிக்க போலீஸார் முடிவு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆசிரியர்களை விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் PSBB பள்ளி நிர்வாகம் மீது போலீசாரின் பிடி இறுகுகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ பதிவு செய்தது மற்றும் ஆன்லைன் அமைப்பில் அரைகுறை ஆடையுடன் தோன்றியது குறித்து மாணவிகள் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியது தொடர்பாக மாணவிகள் புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் போலீசார் அதிருப்தி அடைந்து விட்டதால் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களை விசாரணை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக மூன்று ஆசிரியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஆசிரியர் ராஜகோபாலனை அடுத்து மேலும் சில ஆசிரியர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் PSBB பள்ளியை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருவதும் பள்ளி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com