பாலியல் புகார்: ஆசிரியரை சுற்றிவளைத்த போலீஸ்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!

பாலியல் புகார்: ஆசிரியரை சுற்றிவளைத்த போலீஸ்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!

சென்னை சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டவிட்டுள்ளதாக சற்று முன்னர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

அந்த ஆசிரியர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். மேலும் முன்னாள் மாணவர்கள் சங்கமும் வலியுறுத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பள்ளி மாணவிக்கு பாலியல் குற்றச்சாட்டில் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் தொடர்புடைய தனியார் பள்ளி ஆசிரிய ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீசார், கல்வித் துறையின் விசாரணையை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவிக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் ராஜகோபாலனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். மடிப்பாக்கத்தில் அவர் வசித்து வரும் நிலையில் அவரது இல்லத்தை நோக்கி விரைந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து தற்போது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆசிரியர் மீதான விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துப்போக ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறை குற்றச்சாட்டு கூறி உள்ளது. இந்த விசாரணை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com