இன்னும் ஒரே நாளில் தமிழகத்தில் ஆக்சிஜன் சப்ளை சீர் செய்யப்படும்: தமிழக அரசு

இன்னும் ஒரே நாளில் தமிழகத்தில் ஆக்சிஜன் சப்ளை சீர் செய்யப்படும்: தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் சீரான ஆக்சிஜன் சப்ளை இல்லாமலும், படுக்கை கிடைக்காமலும் பல நூறு பேர் இறந்த நிலையில், சென்ற வாரம் தமிழகத்திலும் இதே காரணங்களால் பலர் உயிரிழந்தனர்.

குறிப்பாக ஆக்சிஜன் சப்ளை சீராக இல்லாத காரணங்களாக் உயிரிழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சப்ளை போதுமான அளவுக்கு இருந்துவிட வேண்டும் என்னும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,

'இன்னும் ஒரே நாளில் தமிழகத்தில் ஆக்சிஜன் சப்ளை சீர் செய்யப்படும். ஆக்சிஜன் உற்பத்தியைப் பெறுக்குவது, பல இடங்களில் இருந்து ஆக்சிஜன் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

சீனாவிலிருந்து 12 ஆக்சிஜன் கன்டெய்னர்கள் நமக்கு வர உள்ளன. இதன் மூலம் பல இடங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com