சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது!

சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது!

சர்ச்சைக்குரிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முதலில் தயாரிக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜனாது டேங்கர் லாரி மூலமாக நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இதனை கொடி அசைத்து வைத்துத் தொடக்கி வைத்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவமனைக்கு முதற்கட்டமாக 4.8 டன் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அடுத்ததாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது. 98.9 சதவீதம் தூய்மையான திரவ ஆக்சிஜனாக இது உள்ளது என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த ஆக்சிஜன், மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் பிரித்து தேவைக்கு ஏற்றவாறு வழங்கப்படும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com