ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக திறக்கப்பட்டது என்பதும் நேற்று முதல் தவணையாக ஸ்டெர்லைட் இலிருந்து 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு கண்டெய்னர் மூலம் நெல்லைக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நிபுணர்கள் தொழில்நுட்ப கோளாறை சரி பார்க்கும் முயற்சியில் இருப்பதாகவும் விரைவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நெல்லைக்கு அனுப்பப்பட்ட 4.82 மெட்ரிக் டன் நேற்று பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பல உயிர்களை காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com