முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வைத்த கோரிக்கை!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வைத்த கோரிக்கை!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை முன் களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர், 'தங்களது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பொது மக்களுக்கு சேவ புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாளற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பலர் கொரோன நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிந்து உள்ளதாகவும் தெரிகிறது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்துத் தொழிலாளர்களையும் முன் களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

முன்னதாக பன்னீர் செல்வம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும், முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com