முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அளவில் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் முறையான ஆவணங்களின்றியும், இ-பதிவு செய்யாமலும் சென்ற வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளார்.

இது குறித்து ஓ.பி.எஸ் தெரிவிக்கையில், 'வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாட்டில் இ-பதிவு முறையில் அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமைதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்' என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்து உள்ளார்.

நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், தலைநகரான சென்னையில் பல்வேறு இடங்களில் காவலர்கள் சோதனைச் சாவடி அமைத்து ஆய்வில் ஈடுபட்டனர். இப்படி ஆய்வில் ஈடுபட்ட ஒரே நாளான நேற்று மட்டும் 1,805 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com