இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்: முதல்வருக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்: முதல்வருக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணியாளர்களை, முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின் வாரியப் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்று தொழிற் சங்கத்தின் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களை முன் களப் பணியாளர்களாக அறிவிக்கவும், முன் களப் பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கும் கிடைக்கவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தி உள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை முன் களப் பணியாளர்களாக அறிவித்து உத்தரவிட்டது தமிழக அரசு.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com