ஓ பன்னீர்செல்வம் சகோதரர் காலமானார்: அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

ஓ பன்னீர்செல்வம் சகோதரர் காலமானார்: அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் ஓ பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் ஓ பாலமுருகன் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சை முடிந்து நேற்று அவர் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு திரும்பியதாகவும் இதனையடுத்து இன்று காலை அவர் காலமானதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரர் ஓ பாலமுருகன் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com