இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு: ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு!

இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு: ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் திங்கள் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்ததை பார்த்தோம். இந்த ஒருவார ஊரடங்கில் காய்கறி மளிகை உள்பட பல கடைகளுக்கு திறக்க அனுமதி இல்லை என்றும் பால், மருந்து பொருட்கள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதி என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் நாளையும் வெளியூர் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இன்றும் நாளையும் தமிழகத்திற்குள் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்றும், வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதியும் தமிழக அரசின் உத்தரவை ஏற்றும் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இன்றும் நாளையும் வெளியூர் செல்பவர்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்பதால் அதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com