"தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை"- அரசு உறுதி

"தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை"- அரசு உறுதி

நாட்டிலேயே கொரோனாவால் ஒரு நாள் பாதிப்பு அதிகமாக இருக்கும் தமிழகத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது தமிழகம். இந்த தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் நேற்று வரை பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவை அமல் செய்தது தமிழக அரசு. இந்த ஊரடங்குக்கு, தொற்று பாதிப்பு குறையாத நிலையில் இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.

'கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நமக்குத் தேவை இருப்பதை விட ஆக்சிஜன் அளவு அதிகமாகவே இருப்பில் உள்ளது' என்று ஆக்சிஜன் தேவை குறித்த கேள்விக்கு அமைச்சர் மெய்யநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com