ஊரடங்கை விடுமுறை என மக்கள் நினைப்பது வேதனை: முக ஸ்டாலின்

ஊரடங்கை விடுமுறை என மக்கள் நினைப்பது வேதனை: முக ஸ்டாலின்

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது குறித்து அனைத்து கட்சி சட்டமன்ற குழுவினர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் போது பொதுமக்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியை உணராமல் செயல்படுவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதே தவிர இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் மக்களின் பாதுகாப்பதற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்றும் ஆனால் ஊரடங்கை விடுமுறை காலம் என நினைத்து பொது மக்கள் அதை உணராமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தளர்வுகள் அற்ற ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்னும் இரண்டு வாரத்துக்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அவர்களில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com