தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை: அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை: அரசு திட்டவட்டம்!

கொரோனா தொற்றுப் பரவலால் நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவை உள்ளது. இப்படி ஆக்சிஜன் தேவை சரி வர இல்லாத காரணத்தினால் இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு சிலர் இறக்க நேரிடும் சம்பவங்கள் நடந்தன. அதிலிருந்து தொடர்ந்து ஆக்சிஜன் இருப்பு அதிகரித்து வந்த காரணத்தினால், தற்போது அதன் பற்றாக்குறை காரணமாக இறப்பு என்பது இல்லாமல் இருக்கிறது.

இதை உறுதி செய்திருக்கிறார் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன்,

தற்போது தமிழகத்தில் தினந்தோறும் ஆக்சிஜன் கையிருப்பு 650 மெட்ரிக் டன். 7 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த வரை 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பில் இருந்தது. 20 நாட்களில் ஆக்சிஜன் கையிருப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஆக்‌சிஜன் பற்றாக்குறையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றுப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அரசு நிலைப்பாடு எடுத்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com