கட்சி, தலைவர் அடையாளமின்றி வழங்கப்படும் நிவாரண பொருட்கள்: அரசுக்கு குவியும் பாராட்டு

கட்சி, தலைவர் அடையாளமின்றி வழங்கப்படும் நிவாரண பொருட்கள்: அரசுக்கு குவியும் பாராட்டு

அரசு சார்பில் கொடுக்கப்படும் நிவாரண பொருள்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வழங்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது புதிய அரசு ஏற்றிருக்கும் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிவாரண பொருள்களிலும் தலைவர்கள் புகைப்படமோ கட்சியின் சின்னமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருவதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி முதல் இந்த பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவு, சர்க்கரை, உளுந்தம்பருப்பு உள்பட 13 பொருள்கள் வழங்கப்படும் பையின் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் முதல்வர் புகைப்படமோ கட்சியின் சின்னமோ எந்தவித படமும் இல்லாமல் பொருட்களின் பெயர் மற்றும் அதன் அளவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நாகரீக ஆட்சி, நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும் இதே முறையை தொடர வேண்டும் என்றும் நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com