ஊரடங்கு காலத்தில் தடையற்ற மின்சாரம் - புகார் எண் அறிவித்த தமிழக அரசு!

ஊரடங்கு காலத்தில் தடையற்ற மின்சாரம் - புகார் எண் அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் மின்சார பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கோடைக் காலம் தொடங்கிய நிலையில், மின் கட்டமைப்பு மேலாண்மை, தடையில்லா மின் வழங்குதல், கூடுதல் மின் தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின் வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் சிறப்பு கவனம் செலுத்தி தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

பொது மக்களிடமிருந்து மின் தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின் தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம். மின் தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com