ஒரே நிமிடத்தில் கொரோனா பரிசோதனை: புதிய கருவி கண்டுபிடிப்பு!

ஒரே நிமிடத்தில் கொரோனா பரிசோதனை: புதிய கருவி கண்டுபிடிப்பு!

ஒரே நிமிடத்தில் கொரோனா பரிசோதனையை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை சிங்கப்பூர் கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனாவை கண்டுபிடிக்க ஆர்டி-பிசிஆர் என்ற என்ற பரிசோதனை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் பிரிக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா பரிசோதனைக்கு என புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது. இந்த கருவியின் மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஒரே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.

இதன் ஒரு முனையில் உள்ள குழாய் மூலம் பரிசோதனைக்கு உள்ளானவர் ஊத வேண்டும். அதன்பின் இக்கருவி அவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரே நிமிடத்தில் சொல்லிவிடும். இதில் கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் மட்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தோனேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது சிங்கப்பூர் அரசு இந்த கருவிக்கு அனுமதி அளித்துள்ளது. விரைவில் இந்தியாவுக்கும் இந்த கருவி பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவு வெளிவர பல மணி நேரம் தேவைப்படும் நிலையில் ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com