நாம் தமிழர் கட்சி சீமான் தந்தை காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்

அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி சீமான் தந்தை காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் சற்று முன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி என்பதும் 234 தொகுதிகளிலும் எந்த கூட்டணியும் இன்றி போட்டியிடும் ஒரே கட்சி இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல் போராடும் குணம் உள்ள சீமானின் கட்சி போட்டியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து செய்தி அறிந்ததும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சீமான் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து சீமானுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com